Tuesday, June 25, 2013

மொட்டை மாடி மொட்டை மாடி...................

நீ மாடிக்கு வந்து விட்டாய் என்று அறிவித்து போனது


ஜன்னல் ஒர நிலவு
*************************************************************

உனக்காய் வானம் பார்த்து நிற்கயில்

இன்னும் கொஞ்சம் காத்திரு என்பதை

பக்கத்து மாடியில் இருந்து சொல்லாமல் சொல்லும்

காற்றில் ஆடும் உன் வெள்ளை சட்டை
*************************************************************

தாள் திறக்கும் ஓசைக்காய் காதும்

உன் முகம் பார்க்க என் கண்ணும்

சந்தன வாசத்திற்க்காய் நாசியும்
பெயர் சொல்லும் தித்திப்பிற்காய் நாவும்

காற்றில் கொடுக்கும் முத்ததிற்காக ஸ்பரிசமும்

கவிதை தூவ நிலவும்

காதலுடன் காத்திருக்கின்றன என் மொட்டை மாடியில்
*************************************************************

தூரத்தில் கேட்க்கும் வானொலிப் பாடல்

கையாட்டி கூப்பிடும் தென்னை மரம்

செடியில் பூத்த மல்லிகை வாசம்

எதையும் ரசிக்கத் தோன்றவில்லை

நீ மாடி சுவரில் சாய்ந்து

என்னை நோக்கி புன்னகைகயில்
*************************************************************


Wednesday, April 4, 2012

மீண்டும் வா.........

என் கரடி பொம்மையை மடியில்
வைத்துக் கொண்டு பேசுகிறாய்
நீ உட்கார வேண்டிய மடியில் நான் என்று
கிண்டலாய் என்னை பார்த்து சிரிக்கிறது என் பொம்மை
*************************************************************************************

பால் சர்க்கரை காபி தூளுடன்
காதலை சற்று அதிகமாகவே கலந்து கொடுத்தேன்
பிடித்திருக்கிறது என்றாய்
நீ சொன்னது காபியை அல்ல என் காதலை
என்று உண்மையை ஏற்காமல் அடம் பிடிக்கிறது மனம்

*************************************************************************************

இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்து விட்டு போயேன்
என்றான் என் அண்ணன்
வேண்டாம் நீ உடனே கிளம்பு !
உன் குரலை கேட்டால் முகம்
பார்க்காமல் இருக்க முடியவில்லை
திரும்ப அண்ணன் அறையை தாண்டி போவதற்கு
தகுந்த காரணமும் தெரியவில்லை

************************************************************************************

நீ அமர்ந்த நாற்காலியில்
இன்னும் கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருக்கிறது உன் கம்பீரம்
*************************************************************************************

வீடு முழுக்க கூட்டிப் பெருக்கினேன்
ஏனோ நீ போட்டுச் சென்ற
சிகரட் துண்டுகளை மட்டும்
பெருக்க மனம் இல்லை
அவை அப்படியே இருக்கட்டும்
நீ மறுபடி வந்து எதாவது
நினைவு சின்னம் விட்டு செல்லும் வரை

*************************************************************************************

உன் விரல் தடம் கேட்கிறது அழைப்பு மணி
உதட்டு ரேகை தேடுகிறது காபி கோப்பை
முகம் பார்க்க துடிக்கிறது என் மனம்
எப்பொழுது மீண்டும் வந்து மோட்சம் கொடுப்பாய்?

Wednesday, March 9, 2011

கதம்பம் -1

இப்பவெல்லாம் அடிக்கடி சமையல் கட்டு பக்கம் போவதால் காலையில் சீக்கிரம் சமைக்க முடிகிறது.
என்ன சமையல்பதிலாய் உப்பு ஜாஸ்தியா போனா என்ன பண்ணனும், சாம்பார் தண்ணியா போனா
எப்படி சமாளிக்கணும் இதெல்லாம் முன்னாடியே கத்துக்கிட்டு இருக்கணும். Anyways better late
than never.

எதாவது பியுட்டி பார்லர் போனால் அங்கு வேலை பார்ப்பவர்கள் இது அது என்று எதாவது இழுத்து
விட்டுக் கொண்டே போவார்கள். நான் சில நாட்களுக்கு முன் போனா
ஒன்றில் இப்படி தான் நீங்க எங்க eye-brows ட்ரிம் பண்ணறீங்க, எங்கே தலைக்கு henna போடறீங்க .
நல்லாவே இல்லை இப்படி செஞ்சுடாங்க பாருங்க என்கிற மாதிரி பேசி கொண்டே இருந்தார்கள் .
கொங்க நேரம் கழித்து நான் "போன மாதம் நீங்க தான் இதெல்லாம் செஞ்சது , ஏன் நீங்க
ஒழுங்கா செய்யலை ? " என்று கேட்டதும் நாங்கள் அப்படி சொல்லவில்லை என்று மழுப்பிவிட்டார்கள்.சொன்ன வேலையை மட்டும் செய்யும் நல்ல பியுட்டி பார்லரை தேடிக் கொண்டு இருக்கிறேன்

அது என்ன கதம்பம்னு பெயரா? என்ன வைப்பது என்று தெரியவில்லை அதான்

Friday, July 2, 2010

உன் பார்வையில் ஓராயிரம்

முதல் வார்த்தை இல்லை
முதல் பார்வை தான்
ஒலிக்கிறது இன்றும் சத்தமாய்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஒன்று அருகில் வா
அல்லது தூர செல்
இரண்டுக்கும் நடுவில்
உள்ள இடைவெளியில் இருந்து
பார்த்தே கொல்லாதே!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வெட்கம் என் வார்த்தைகளை விழுங்கும் போதும்
உன் பார்வை என் பெண்மையை தட்டி எழுப்பும் போதும்
கண்கள் உன்னையில்லாமல்
மண்ணையே பார்க்கும்

Thursday, June 3, 2010

தங்கமணி ஊருக்கு போய்டுச்சு என்ஜாய்

பாஸ் லீவுல போனா சந்தோசம்
லாங் லீவுல போனா ரொம்ப சந்தோசம்
வேலை எதுவும் கொடுக்காம போனா
ரொம்ப ரொம்ப சந்தோசம்
இப்படி எல்லா சந்தோஷமும் சேர்ந்து வந்தா

தங்கமணி ஊருக்கு போய்டுச்சு என்ஜாய் !!

Tuesday, June 1, 2010

காதல் நினைவுகள்

யோசிக்கவே நேரம் இல்லாமல்
வாழ்க்கை செல்கையில்
திடிரென முணுமுணுக்கச் செய்கிறது
மனதிற்கு பிடித்த பழைய பாடலும்
முதல் காதல் நினைவுகளும்

Monday, March 29, 2010

இவங்க என்ன சொல்லறாங்க?

ஆண்கள் அகராதியில் சில சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று இப்போது தான் கண்டுப்பிடித்தேன்

Help செய்வது : டி.வி ரிமோட்டை தேடி தந்தால் சேனல் மாற்றுவது, எதாவது போன் டி. வி பார்க்கும் பொது வந்தால் mute செய்வது

Pack செய்வது : ஊருக்கு போக தேவையான பாண்ட் ஷர்ட் மட்டும் தான் எடுத்து வைக்க வேண்டும். பிறகு நான் ரெடி நீ இன்னுமா பாக் செய்யல என்று கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.போன இடத்தில எனக்கு நீ ஏன் towel எடுத்து வைக்கல , ஏன் சோப்பு எங்க , இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும்

Clean செய்வது: வீட்டில் அடசலாய் இருக்கும் பொருட்களை ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு மாற்றுதல். பத்து நாள் கழித்து மறுப்படியும் இடம் மாற்றம்.

சேர்ந்து சாப்பிடுவது: Dining Table வரும் பொது மறக்காமல் சேர்த்து பேப்பரையும் கொண்டு வர வேண்டும். பேசாமல் சாப்பிட வேண்டும். சமைத்தது நன்றாக இருந்தால் ஒன்றும் சொல்லக் கூடாது.நல்லாயில்லை என்றால் மட்டும் நிறைய கமெண்ட் அடிக்க வேண்டும்

இன்னும் தொடரும்