Friday, July 2, 2010

உன் பார்வையில் ஓராயிரம்

முதல் வார்த்தை இல்லை
முதல் பார்வை தான்
ஒலிக்கிறது இன்றும் சத்தமாய்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஒன்று அருகில் வா
அல்லது தூர செல்
இரண்டுக்கும் நடுவில்
உள்ள இடைவெளியில் இருந்து
பார்த்தே கொல்லாதே!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வெட்கம் என் வார்த்தைகளை விழுங்கும் போதும்
உன் பார்வை என் பெண்மையை தட்டி எழுப்பும் போதும்
கண்கள் உன்னையில்லாமல்
மண்ணையே பார்க்கும்

Thursday, June 3, 2010

தங்கமணி ஊருக்கு போய்டுச்சு என்ஜாய்

பாஸ் லீவுல போனா சந்தோசம்
லாங் லீவுல போனா ரொம்ப சந்தோசம்
வேலை எதுவும் கொடுக்காம போனா
ரொம்ப ரொம்ப சந்தோசம்
இப்படி எல்லா சந்தோஷமும் சேர்ந்து வந்தா

தங்கமணி ஊருக்கு போய்டுச்சு என்ஜாய் !!

Tuesday, June 1, 2010

காதல் நினைவுகள்

யோசிக்கவே நேரம் இல்லாமல்
வாழ்க்கை செல்கையில்
திடிரென முணுமுணுக்கச் செய்கிறது
மனதிற்கு பிடித்த பழைய பாடலும்
முதல் காதல் நினைவுகளும்

Monday, March 29, 2010

இவங்க என்ன சொல்லறாங்க?

ஆண்கள் அகராதியில் சில சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று இப்போது தான் கண்டுப்பிடித்தேன்

Help செய்வது : டி.வி ரிமோட்டை தேடி தந்தால் சேனல் மாற்றுவது, எதாவது போன் டி. வி பார்க்கும் பொது வந்தால் mute செய்வது

Pack செய்வது : ஊருக்கு போக தேவையான பாண்ட் ஷர்ட் மட்டும் தான் எடுத்து வைக்க வேண்டும். பிறகு நான் ரெடி நீ இன்னுமா பாக் செய்யல என்று கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.போன இடத்தில எனக்கு நீ ஏன் towel எடுத்து வைக்கல , ஏன் சோப்பு எங்க , இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும்

Clean செய்வது: வீட்டில் அடசலாய் இருக்கும் பொருட்களை ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு மாற்றுதல். பத்து நாள் கழித்து மறுப்படியும் இடம் மாற்றம்.

சேர்ந்து சாப்பிடுவது: Dining Table வரும் பொது மறக்காமல் சேர்த்து பேப்பரையும் கொண்டு வர வேண்டும். பேசாமல் சாப்பிட வேண்டும். சமைத்தது நன்றாக இருந்தால் ஒன்றும் சொல்லக் கூடாது.நல்லாயில்லை என்றால் மட்டும் நிறைய கமெண்ட் அடிக்க வேண்டும்

இன்னும் தொடரும்

Monday, January 18, 2010

கேட்டவுடன் லீவ் கிடைக்க செய்ய வேண்டிய வழிகள்

இருக்கும் எல்லா லீவையும் எடுத்தாச்சு. சிக் லீவ் எடுக்கலாம் என்றால் உடம்பு சரியில்லை என்றுயாரும் நம்ப மாட்டார்கள். இப்பொழுது லீவ் எடுக்க என்ன செய்ய வேண்டும். வேலை அழுத்தினால் ஒருமாதிரி ஆய்டீங்க என்று காட்ட வேண்டும்.

1) ஆபிசில் இருக்கும் சேர் எல்லாம் ரயில் மாதிரி அடுக்கி அதை தள்ளிக் கொண்டு ரயில் மாதிரி சத்தம் போட்டுக் கொண்டு வரவும்.
2) டிராவல் பிளான் அனுப்பிகிறேன் என்று காலை ஒன்பது முதல் ஒன்பதரை வரை கான்டீன், ஒன்பதரைமுதல் ஒன்பது நாப்பது வரை வாட்டர் கூலர், பிறகு மாடி படி ஏறுதல் என்று எல்லாருக்கும் மெயில் அனுப்பவும்.
3) மீட்டிங் எல்லாம் இனி குத்து விளக்கு ஏற்றி விட்டு , கடவுள் வாழ்த்து பாடி தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கவும். ராவு காலத்தில் மீட்டிங் எதுவும் வைக்க கூடாது என்று ஹெச் ஆர்க்கு மெயில் அனுப்பவும்.
4) நம் கம்பெனியில் காபி தான் நிறைய விற்பனை ஆகிறது. அதனால் அதை நாமே சொந்தமாக தயாரிக்கலாம். ஐநூறு மாடு வாங்கி ஓவ்வொரு டீமும் தினமும் பத்து மாட்டில் பால் கறந்தால் இதில் நிறைய பணம் சேமிக்கலாம் என்று பினான்ஸ் டிபார்த்மேனிடம் போய் பேசுங்கள்.
5) இந்த பட்டனை அமுக்கினால் என்ன ஆகும் என்று கேட்டு தினமும் ரெண்டு பேர் மெசினை ஆப் செய்யுங்கள்
6) அவ்வப்போது சீட் மேல் ஏறி நில்லுங்கள். யாராவது கேட்டல் நான் வேலை செய்யாமல் வீட்டுக்கு போனதற்கு பாஸ் பனிஷ்மென்ட் கொடுத்துவிட்டார் என்று அழுங்கள்.



இதை நீங்கள் எதாவது ஓவராய் செய்து வேலை காலி ஆனால் நான் பொறுப்பில்லை.

Monday, January 11, 2010

பாஸிடம் சொல்ல நினைக்கும் விஷயங்கள்



எதாவது ரிப்போர்ட் செஞ்சுக் கொடுத்தால் "Tell me a single reason why i should not
throw this in dustbin? "
என்று கேட்கிறீர்களே நீங்கள் இவ்வாறு கேட்பீர்கள் என்று தெரிந்து உங்கள் டஸ்ட் பின்னை ஏற்கனவே ஒளித்து வைத்துவிட்டேன்.அதையே நீங்கள் இன்னும் பார்கவில்லை

நான் வரும்போதெல்லாம் வேலை செய்யமால் வேறு ஏதோ செய்துக் கொண்டு இருக்கிறாய் என்று சொல்கிறீர்கள். நீங்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள ஆள் உயரக் கண்ணாடியை என் மேஜைக்கு கொண்டு வந்து வைத்தேன். அதற்க்கு அட்மினில் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.நீங்கள் வருவது தெரிந்தால் தானே நான் வேலை செய்ய முடியும்

"நேத்து வீட்டில் தூங்கும் போது கஸ்டமர் போன் செஞ்சு நீ செய்த வேலையே பத்திக்
கத்திண்டே இருந்தான். ஒரு நாள் நிம்மதியா தூங்க முடியல உன்னால" என்று சொல்கிறீர்கள். ஒரு சின்ன கேள்வி. கஸ்டமர் போன் செஞ்சு நான் செய்த வேலை நல்ல
இருந்துதுன்னு தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டிருந்தால் சந்தோசப்படுவீர்களா? தூக்கத்தில்
இருந்து எழுப்பியது கஸ்டமர் தவறு.

'என் கண் முன்னாடி நிக்காதே எனக்கு டென்ஷன் ஏறுது' என்று நீங்கள் சொன்னதனால் தான் நான் காபி சாப்பிட கான்டீன் போய் இரண்டு மணி நேரம் கழித்து வந்தேன். அதற்குள் எங்கெல்லாம் உன்னை தேடறது எங்கே போய்ட்ட என்று கேட்டால் நான் என்ன செய்வது


"எல்லாம் ஒழுங்கா போயிட்டு இருக்கும்போதே ஏதோ ஒண்ணு சரியில்லைன்னு பார்த்து நடக்க
வேண்டாமானு " கேட்கறீங்க. நீங்க என்னிகாவது ஆறு மாசமா உடம்பு நல்லா இருக்குனு டாக்டர் கிட்ட போயிருக்கீங்களா இல்லை கார் நல்லா ஓடுதுன்னு மெக்கானிக் கிட்ட எடுத்துட்டு போயிருக்கீங்களா?


என்ன கொடுமை சார் இது