Wednesday, July 8, 2009

மழை

நின் தொடுதல் ஒரு மழை போல்
இதமான மாலை வேலையில்
கன்னம் தொடும் சின்ன தூறலாய்
ஒதுங்கி இருக்கும் வேலையில்
தேடி வந்து தொடும் சாரலாய்
எதிர்பார்த்து நிற்கும் போது
சிரித்து விட்டு செல்லும் சிறு மின்னலாய்
***************************************************************************************
நினைய
நினைக்க
தொட
விலக
சிலிர்க்க
சிரிக்க
தேவை ஒரு மழை
************************************************************************************
உன் கைக்குட்டை என் குடையாய் வர
என் விரல்கள் உன் தலை துவட்ட
வாழ்க குடை மறந்த நாட்களில் பெய்யும் மழை
************************************************************************************
மழை வந்ததும்எல்லாரும் ஜன்னல் சார்த்த
நீ மட்டும் ஜன்னல் திறக்க
புதிதாய் ரசித்தேன்
மழையையும் உன்னையும்

1 comment:

  1. //உன் கைக்குட்டை என் குடையாய் வர
    என் விரல்கள் உன் தலை துவட்ட//

    நல்ல வரிகள். நல்லா இருக்குங்க.

    --
    ப்ரியத்துடன்,
    கோகுல்

    ReplyDelete