Monday, January 18, 2010

கேட்டவுடன் லீவ் கிடைக்க செய்ய வேண்டிய வழிகள்

இருக்கும் எல்லா லீவையும் எடுத்தாச்சு. சிக் லீவ் எடுக்கலாம் என்றால் உடம்பு சரியில்லை என்றுயாரும் நம்ப மாட்டார்கள். இப்பொழுது லீவ் எடுக்க என்ன செய்ய வேண்டும். வேலை அழுத்தினால் ஒருமாதிரி ஆய்டீங்க என்று காட்ட வேண்டும்.

1) ஆபிசில் இருக்கும் சேர் எல்லாம் ரயில் மாதிரி அடுக்கி அதை தள்ளிக் கொண்டு ரயில் மாதிரி சத்தம் போட்டுக் கொண்டு வரவும்.
2) டிராவல் பிளான் அனுப்பிகிறேன் என்று காலை ஒன்பது முதல் ஒன்பதரை வரை கான்டீன், ஒன்பதரைமுதல் ஒன்பது நாப்பது வரை வாட்டர் கூலர், பிறகு மாடி படி ஏறுதல் என்று எல்லாருக்கும் மெயில் அனுப்பவும்.
3) மீட்டிங் எல்லாம் இனி குத்து விளக்கு ஏற்றி விட்டு , கடவுள் வாழ்த்து பாடி தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கவும். ராவு காலத்தில் மீட்டிங் எதுவும் வைக்க கூடாது என்று ஹெச் ஆர்க்கு மெயில் அனுப்பவும்.
4) நம் கம்பெனியில் காபி தான் நிறைய விற்பனை ஆகிறது. அதனால் அதை நாமே சொந்தமாக தயாரிக்கலாம். ஐநூறு மாடு வாங்கி ஓவ்வொரு டீமும் தினமும் பத்து மாட்டில் பால் கறந்தால் இதில் நிறைய பணம் சேமிக்கலாம் என்று பினான்ஸ் டிபார்த்மேனிடம் போய் பேசுங்கள்.
5) இந்த பட்டனை அமுக்கினால் என்ன ஆகும் என்று கேட்டு தினமும் ரெண்டு பேர் மெசினை ஆப் செய்யுங்கள்
6) அவ்வப்போது சீட் மேல் ஏறி நில்லுங்கள். யாராவது கேட்டல் நான் வேலை செய்யாமல் வீட்டுக்கு போனதற்கு பாஸ் பனிஷ்மென்ட் கொடுத்துவிட்டார் என்று அழுங்கள்.



இதை நீங்கள் எதாவது ஓவராய் செய்து வேலை காலி ஆனால் நான் பொறுப்பில்லை.

2 comments:

  1. ஐடியா எல்லாம் நன்றாக இருக்கிறது... ஆனா இதை எல்லாம் செய்து கேட்டா அடுத்த நாள் ஆபிஸ் வாசல்ல தான் நிக்கனும்...

    ReplyDelete
  2. அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீங்க தைரியமா செய்யுங்க !!

    ReplyDelete