Monday, December 7, 2009

தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்க

நம்ம எல்லார் வீட்லயும் எதாவது சில பொருட்கள் தொலைந்து அதை தேடுவதற்கே பாதி நேரம் போகும். தொலையும் பொருட்கள் பெரும்பாலும் இதில் எதாவது ஒன்றாக தான் இருக்கும் ஐடென்டிடி கார்டு, வண்டியின் மாற்று சாவி , நாம் வாங்கிய பொருட்களின் வாரண்டி/காரண்டி கார்டு, கண் பரிசோதனை கார்டு, ரயில் டிக்கெட், தோடு திருகாணி மற்றும் சில. தேடுவதை எப்படி சுவாரசியமாக்குவது என்று பார்ப்போம்.

தேடுவதென்பது ஒரு டீம் வொர்க். அதை பகுதி பகுதியாய் பிரித்து செய்ய வேண்டும். ஒருவர் அலமாரி, ஒருவர் டிவிக்கும் அதன் மேல் கவுருக்கும் அடியில் இருக்கும் பகுதி இந்த மாதிரி பிரிக்க வேண்டும். ஒரு முறை மட்டும் ஒரு இடத்தை தேடினால் போதாது. மீண்டும் ஒருவர் தேடி அந்த இடம் சரியாக தேடப்பட்டுள்ளதா என்று ரெவியு செய்ய வேண்டும்.

பொருட்களை பொறுத்து அதை தேடும் விதம் அமையும். தோடு திருகாணி தொலையும் பொது தரையில் குப்பறப் படுத்து எல்லா திசைகளிலும் பார்த்து தேட வேண்டும். இதில் சோபா மற்றும் கட்டில்அடியில் கவனமாக பார்க்க வேண்டும். ரயில் டிக்கெட் தேடும் பொது அலமாரியில் இருக்கும் எல்லா காகிதத்தையும் கீழே தள்ளி விட்டு பிறகு ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க வேண்டும். உயரமான ஆட்களுக்கு அலமாரி மேல் தட்டு, ஒல்லியான ஆட்களுக்கு கட்டிலுக்கு கீழ் என்று டீம் அல்லாட் செய்ய வேண்டும்.

தேடுவதற்கு என்று ஒரு டீஷிர்ட் தயார் செய்யலாம். 'Search team of the house', 'Power of Searching','You lose, We search' இந்த மாதிரி எதாவது ஸ்லோகனை பயன்படுத்தலாம். தேடும் நேரங்களில் அந்த டீஷிர்ட் அணிந்து கொண்டு தேடினால் டீம் ஸ்பிரிட் நன்றாக இருக்கும். தேடுவதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணி செய்வது போல எல்லாரும் வட்டமாக நின்று கட்டிபிடிக்க வேண்டும். தொலைந்த பொருளை தேடி எடுத்தவருக்கு 'Star searcher of the house' என்ற அவார்ட் கொடுத்து உற்சாகப் படுத்துவது முக்கியம் .தேடிய பொருள் கிடைத்த உடன் அதை வைத்துக் கொண்டு டீம் போட்டோ எடுத்துக் கொண்டு அதை வீட்டில் மாட்ட வேண்டும்.தேடுதலை உற்சாகப் படுத்த டீம் லஞ்ச், டின்னர் சென்று பாண்டிங் இம்ப்ரூவ் செய்வது முக்கியம்

வெற்றிகரமாக தேடி முடித்தப்பின் எங்கு எந்த பொருள் கிடைத்தது என்று ஒரு எக்ஸ்செல் ஸீட்டில் குறித்து வைக்க வேண்டும். உதாரணமாக ரயில் டிக்கெட் இரண்டு பால் கார்டுக்கு நடுவில் நான்காக மடித்து இருந்தது. இவ்வாறு செய்து ரூட் காஸ் அனாலிசிஸ் அதாவது ஏன்
பொருள்கள் தொலைகிறது என்று யோசிக்க வேண்டும்.

சரி நானும் போய் என் எக்ஸாம் ஹால் டிக்கெட் தேடி விட்டு வருகிறேன்

7 comments:

  1. தமிழ் தாண்டவமாடுது போல இருக்கே

    > அதன் மேல் கவுருக்கும் - அதன் மேல் உறைக்கும்
    > ரெவியு - மறு ஆய்வு (அ) ஆய்வு
    > அல்லாட் - ஒதுக்கீடு
    > பாண்டிங் - ??
    > எக்ஸ்செல் ஸீட்டில் - விரி தாள் (spreadsheet)
    > ரூட் காஸ் அனாலிசிஸ் - ??

    ReplyDelete
  2. இதை விட்டுட்டியே
    டீம் போட்டோ - குழு புகைப்படம்
    ஹால் டிக்கெட் - பரீட்சை அனுமதி தாள்

    ReplyDelete
  3. வேலையே இல்ல அதான்

    ReplyDelete
  4. சக்கரபாணி: பாண்டிங் = ஆஸ்த்ரேலிய வீரர் அல்ல, ’பந்தம்’ என்பதின் ஆங்கில சொல்.....ராம்கோ விளம்பரத்தை மறக்கலாமா? அதுவும் நீ?

    ReplyDelete
  5. ரூட் காஸ் அனாலிசிஸ்= மூல காரண ஆராய்சி
    டீம் ஸ்பிரிட்= குழு சரக்கு?

    ReplyDelete
  6. //வெற்றிகரமாக தேடி முடித்தப்பின் எங்கு எந்த பொருள் கிடைத்தது என்று ஒரு எக்ஸ்செல் ஸீட்டில் குறித்து வைக்க வேண்டும்.//

    அப்படிச் சேமிச்சு வச்ச எக்ஸெல் சீட்டுக்கு என்ன பேர் வச்சோம், எந்த ஃபோல்டரில் வச்சோம்-னு எப்படி ஞாபகம் வைக்கிறது? :)

    ReplyDelete